தந்தையின் 70வது பிறந்தநாள் : சினேகா தந்த சர்ப்ரைஸ்
ADDED : 1159 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் நடத்தி வருகிறார். அதேசமயம் தற்போதும் செலக்டிவான, கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சினேகாவின் தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாள். அவருக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என விரும்பினார் சினேகா. அதன்படி சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்ற சினேகா, அங்கிருந்த சிறப்பு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மதியம் சுவையான பிரியாணி விருந்தளித்தும் அவர்களை மகிழ்வித்துள்ளனர்.
தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் விஹானும், மகள் ஆத்யந்தாவும் கூட கலந்துகொண்டனர்.