ஆக., 12ல் ‛விருமன்' ரிலீஸ்
ADDED : 1212 days ago
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கிராமத்து கதையில் தயாராகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. சென்சாரில் யுஏ சான்று பெற்றுள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகயிருந்த விக்ரமின் கோப்ரா படம் பின்வாங்கியது. இந்நிலையில் ஆக., 12ல் விருமன் படத்தை வெளியிடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆக.,3ல் படத்தின் இசை வெளியீடு மதுரையில் நடைபெற உள்ளது.