துரந்தர் 2 : ஹிந்தி தவிர மற்ற மொழி பிரிமியர் காட்சிகள் ரத்து ?
ஆதித்யா தர் இயக்க்ததில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்துள்ள 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் நாளை உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பிரிமியர் காட்சிகள் இன்று நடக்க உள்ளன.
ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவு ஏறக்குறைய முன்பே முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஹிந்தி தவிர மற்ற மொழிகளின் பிரதிகளை உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஹிந்தி பிரிமியர் காட்சிகள் மட்டும் இன்று நடக்கலாம் என்றும், மற்ற மொழிகளின் பிரிமியர் காட்சிகளை ரத்து செய்யும் நிலை உள்ளதாகச் சொல்கிறார்கள். ஒரு வேளை மாலை காட்சிகள் ரத்து ஆனாலும், இரவுக் காட்சிகள் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் ஹிந்திப் பதிப்புக்காக இப்படத்திற்கான முன்பதிவு அமோகமாக நடந்துள்ளது.
மற்ற மொழி பிரிமியர் ரத்து குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.