சிவகார்த்திகேயன் 27 படத்திற்கு சாய் அபயங்கர் இசை
கமல் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ‛சேயோன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்து இவரின் 27வது படமாக உருவாகும் படத்தை ‛பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். கயாடு லோகர் நாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது. இன்று(அக்., 12) மாலை படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இப்போது படத்தின் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதன்மூலம் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு சாய் இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் அடுத்தடுத்து சூர்யா, அல்லு அர்ஜூன், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வருகிறார்.