பி.எஸ்.மித்ரனுடன் இணையும் யஷ்
டாக்சிக் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு யஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது இண்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையைத் தழுவி உருவாகும் ஒரு சுவாரஸ்யமான சாகசப் படத்தில் யஷ் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தமிழில் இரும்புத்திரை, ஹீரோ, சர்தார், சர்தார் 2 ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.
மித்ரன் ஏற்கனவே யஷிடம் கதையைக் கூறிவிட்டதாகவும், அந்த கதை யஷுக்குப் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிதேஷ் திவாரியின் ராமாயணா படத்தில் யஷ் ராவணனாக நடித்து வரும் நிலையில், அப்படத்தை முடித்த பிறகு, இப்படம் குறித்த பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யஷ் கடைசியாக நடித்து வெளியான டாக்சிக் படத்தை போலவே, கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி சமீபத்தில் வெளியான சர்தார் 2 படமும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.