உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுகுமார், ராம்சரண் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

சுகுமார், ராம்சரண் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

தெலுங்கில் புஷ்பா, புஷ்பா 2 உள்பட பல படங்களை இயக்கியவர் சுகுமார். தனது அடுத்த பெரிய திட்டத்திற்காக ராம்சரணை மீண்டும் இயக்கத் தயாராகி வருகிறார். சமீபத்திய தகவலின்படி, படத்தின் திரைக்கதை இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்த கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்தப் பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகுமார் பெரும்பாலான தனது படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத்தையே இசையமைக்க வைத்து வந்த நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராம்சரண் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும். தெலுங்கில் தேவரா பார்ட் 1, கிங்டம், தி பாரடைஸ் படங்களுக்கு பிறகு அனிருத் இசையமைக்கும் படம் இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !