உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் சாய் பல்லவி?

கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் சாய் பல்லவி?

கடந்த 2024ம் ஆண்டில் நாக் அஸ்வின் இயக்கிய படம் கல்கி 2898 ஏடி. பிரபாஸ் நாயகனாக நடித்த இப்படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இப்படம் பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி வசூலித்தது.

மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானதில் இருந்தே முதல் பாகத்தில் தீபிகா படுகோனே நடித்த வேடத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அக்டோபர் 17ம் தேதியன்று நடைபெறும் கல்கி 2 படப்பிடிப்பில் சாய் பல்லவி இணையவுள்ளதாக தெரிகிறது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இப்படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாய் பல்லவியின் ஈடுபாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !