முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி
எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றவர் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்று 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. திரையுலகினர் தொடர்ந்து அவரை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த திரைக்கலைஞர்கள் மட்டுமல்லாது வெளிமாநில திரைக்கலைஞர்களும் சந்திக்கின்றனர்.
அந்தவகையில் ரணபாலி படத்திற்காக சென்னை வந்துள்ளனர் நட்சத்திர தம்பதியரான நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா ஜோடி. இன்று மாலை சென்னை வந்த இவர்கள், முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது தங்களது ரணபாலி படம் ரிலீஸாவது தொடர்பாகவும், அந்த படம் பற்றியும் பல்வேறு விஷயங்களையும் அவரிடம் பகிர்ந்துள்ளனர்.
விஜய் உடன் வாரிசு படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவில், ‛‛அன்பிற்குரிய விஜய் சாருடன் அழகான ஒரு தருணம். அவரது வேலைக்கு இடையே எங்களை மிகுந்த அன்போடு வரவேற்று வாழ்க்கை, பணி உள்ளிட்ட தனது தனிப்பட்ட பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார். ஒரே ஒரு சந்திப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவராகிவிட்டார்'' என குறிப்பிட்டுள்ளார்.