மலையாள நடிகர் சரத் சந்திரன் தற்கொலை
ADDED : 1210 days ago
கேரளாவின் கொச்சியில் வசித்த நடிகர் சரத் சந்திரன்,37, அவரது அறையில் இறந்து கிடந்தார். அவர் அருகே, 'என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது. அவர், சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
உயிரிழந்த சரத் சந்திரன், அங்கமாலி டைரிஸ், ஒரு மெக்ஸிகன் அபராதா உள்ளிட்ட பல மலையாளப் படங்களிலும், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.