மேலும் செய்திகள்
ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள்
1155 days ago
நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக்
1155 days ago
கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து
1155 days ago
இந்திய திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜான் ஆபிரகாம் விருது வழங்கும் விழா கேரளாவில் நடந்தது. இதனை பிரபல மலையாள இயக்குனரும் பல முறை தேசிய விருது வென்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தேசிய திரைப்பட விருது கமிட்டியில், பாலிவுட் ரசிகர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சினிமா புரியாதவர்கள், விருதுகளை வேண்டியவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்று கூட தெரியவில்லை.
ஒரு காலத்தில், நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள், விமர்சகர்கள் மற்றும் கலைஞர்கள் நடுவர்களாக இருந்தார்கள். இப்போது யார் நடுவர் என்றே தெரியவில்லை. விருது படங்களுக்கு என்ன அளவுகோல் என்பதும் தெரியவில்லை. அவர்களின் பட்டியலில் சிறந்த படங்கள் இல்லை. பிளாக்பஸ்டர் படங்களுக்குத்தான் விருதுகள் வழங்கப்படுகின்றன. இது நகைச்சுவையாக இருக்கிறது.
இதெல்லாம் ஏன், எதற்கு என்று கேள்விக் கேட்கக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும். இது பெரிய அநியாயம் என்றுதான் என்னால் சொல்ல முடியும். கேரளாவை அனைத்துத் துறைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
படத்தின் பெயரை அடூர் கோபாலகிருஷ்ணன் குறிப்பிடவில்லை என்றாலும், 5 விருதுகள் பெற்ற சூரரைப்போற்று படத்தையும், 3 விருதுகள் பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தையும் தான் அவர் குறிப்பிடுகிறார் என்று விழாவிற்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.
1155 days ago
1155 days ago
1155 days ago