அருண் விஜய்யின் பார்டர் : ஆக., 31ல் ரிலீஸ்
ADDED : 1172 days ago
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்தபடியாக அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பார்டர் படமும் ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் அரவிந்த் சந்திரசேகர் என்ற அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். மில்டரி பின்னணி கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து திரைக்கு வர தயாராகி உள்ள நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு அறிவழகன் இயக்கத்தில் குற்றம்- 23 என்ற படத்தில் அருண்விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.