மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1154 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1154 days ago
பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான், பிரபல டாக் ஷோவான கரண் ஜோகர் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். அப்போது ஆமீர்கானிடம் முன்னாள் மனைவிகள் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் கூறுகையில், ‛‛எனது முன்னாள் மனைவிகளான ரீனா மற்றும் கிரண் ஆகிய இருவரையும் வாரம் ஒருமுறை நேரில் சந்திப்பேன் என தெரிவித்திருக்கிறார். அதோடு நான் எனது முன்னாள் மனைவிகளை மிகவும் மதிக்கிறேன். அதன் காரணமாகவே அவர்களுடன் நட்பை கடைபிடித்து வருகிறேன். விவாகரத்து செய்து கொண்டாலும் எப்போதும் நாங்கள் ஒரே குடும்பம் தான். அதனால் தான் நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எனது முன்னாள் மனைவிகளை சந்திப்பதை தவறுவதில்லை. எப்போதும் எங்களுக்கிடையே அன்பு, பாசம் , மரியாதை இருந்து கொண்டே இருக்கிறது என்று ஒரு ஆச்சரியமான பதிலை கொடுத்திருக்கிறார் ஆமீர்கான்.
ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளும், அதன் பிறகு இயக்குனர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு 15 ஆண்டுகளும் சேர்ந்து வாழ்ந்தார் ஆமீர்கான் என்பது குறிப்பிடத்தக்கது.
1154 days ago
1154 days ago