மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1128 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1128 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் அவருடன் காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வந்தனர். 40 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, கொரோனா லாக்டவுன் போன்ற பிரச்னைகளால் படப்பிடிப்பு நின்றது.
மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதலால் இந்தியன் 2 படப்பிடிப்பை அப்படியே போட்டுவிட்டு தெலுங்கில ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க தொடங்கினார் ஷங்கர். இதனால் தயாரிப்பு தரப்பு ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. சில மாதங்கள் நீடித்த இந்த வழக்கு பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சமரசத்தால் பிரச்னை தீர்க்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்தியன்- 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி தற்போது குழந்தை பெற்று விட்டதால் அவர் நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் காஜல் அகர்வால். அப்போது இந்தியன் 2 படத்தில் இருந்து நீங்கள் விலகியது ஏன்? என்று ரசிகர் ஒருவர் அவரிடத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இந்தியன் 2 படத்திலிருந்து நான் விலகவில்லை. தொடர்ந்து நான் தான் நடிக்கப் போகிறேன். செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார் காஜல்.
இதன்மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பு செப்., 13ம் தேதி துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு காஜல் அகர்வால் வேடத்தில் தீபிகா படுகோனே நடிப்பதாக வெளியான செய்தி வதந்தியாகி உள்ளது.
1128 days ago
1128 days ago