உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா

தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்ததும் மிகவும் பிரபலமானார். 'புஷ்பா' படத்தின் வெற்றி அவருடைய மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியது.

தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்திலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்து வருகிறார். 'புஷ்பா' பட வெளியீட்டிற்கு முன்பாக 2 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா இப்போது 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். ஹிந்தியில் நடிப்பதென்றால் சம்பளம் 4 கோடியாம்.

தென்னிந்தியத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகிகளில் நயன்தாரா மட்டுமே 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அடுத்து பூஜா ஹெக்டே 4 கோடி வரை வாங்குகிறாராம். இப்போது ராஷ்மிகாவும் 4 கோடி சம்பளத்தைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !