உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ்பாபு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மகேஷ்பாபு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சர்க்காரு வாரி பாட்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் அவரது 28வது படத்தை முன்னணி இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த படம் 2023 ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக இருக்கிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதற்கு முன்னதாக சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வெளியானபோது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸுக்கு விட்டுக்கொடுக்கும் விதமாக ஓரிருமுறை தங்களது ரிலீஸ் தேதியை மாற்றிவைக்க வேண்டிய தர்ம சங்கடமான சூழல் உருவானது. இடையில் கேஜிஎப் 2 மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களும் போட்டிக்கு நின்றதால், சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் ஒரு குழப்பமான சூழ்நிலையில் தான் வெளியானது. இதனை தவிர்ப்பதற்காகவே இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், எட்டு மாதங்களுக்கு பிறகான ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டது தயாரிப்பு நிறுவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !