உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாள் : குடும்பத்துடன் திருப்பதியில் விஜயகுமார் வழிபாடு

பிறந்தநாள் : குடும்பத்துடன் திருப்பதியில் விஜயகுமார் வழிபாடு

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜய குமார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். கலைக்குடும்பம் என சொல்லப்படும் விஜயகுமாரின் வாரிசுகளான அருண் விஜய், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் சினிமாவில் நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.



சினிமா, சீரியல் என நடித்து வரும் விஜயகுமார் இன்று(ஆக.,29) தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் அவரது மனைவி முத்துக்கண்ணு, மகன் அருண் விஜய், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன் இயக்குனர் ஹரி மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோரும் சென்றனர். இதுதொடர்பான போட்டோக்களை அருண் விஜய் பகிர்ந்து தனது அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ரசிகர்கள், திரையுலகினர் பலரும் விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !