சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது
ADDED : 1234 days ago
அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.