பாக்ஸர் படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய ரித்திகா சிங்!
ADDED : 1134 days ago
சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரியல் பாக்சர் ரித்திகா சிங். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்த ரித்திகா சிங், தற்போது பிச்சைக்காரன்- 2, கொலை, பாக்சர், வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பாக்ஸர் படத்தில் ரித்திகாவுக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளது. அதன் காரணமாகவே தற்போது வெயிட் குறைத்து தனது உடற்கட்டை பிட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.