உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளைய மகளை சந்தித்த வனிதா : வைரலாகும் புகைப்படங்கள்

இளைய மகளை சந்தித்த வனிதா : வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவின் வாழ்க்கையோ டோட்டலாக மாறிவிட்டது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும் இருந்து வருகிறார். வனிதாவின் முதல் திருமண உறவில் அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகன் விஜய் ஸ்ரீஹரி விவகாரத்துக்கு பின் தந்தை ஆகாஷூடன் சென்றுவிட்டார். மகள் ஜோவிகா மட்டுமே வனிதாவுடன் வசித்து வருகிறார். வனிதாவுடன் மூத்த மகள் ஜோவிகாவை மட்டுமே பெரும்பாலான பொது வெளிகளில் பார்க்க முடியும். அதே போல் இரண்டாவது திருமண உறவின் மூலம் அவருக்கு ஜெயனிதா என்ற மற்றொரு பெண் குழந்தை பிறந்தார். இரண்டாவது விவகாரத்துக்கு பின் ஜெயனிதாவும் தந்தை ஆனந்த் ஜே ராஜனுடன் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளையமகளை சமீபத்தில் சந்தித்துள்ள வனிதா, மகள் ஜெயனிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இளையமகள் ஜெயனிதா, வனிதாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !