உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியிலும் வரவேற்பைப் பெறுமா 'சீதா ராமம்'

ஹிந்தியிலும் வரவேற்பைப் பெறுமா 'சீதா ராமம்'

ஹனு ராகவபுடி இயக்கத்தில், துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'சீதா ராமம்'. இப்படம் தமிழ், மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், மராத்தி நடிகை மிருணாள் தாக்கூர் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். வேற்று மொழி நடிகர்கள் நடித்த ஒரு தெலுங்குப் படத்திற்கு அங்கு கிடைத்த வரவேற்பு பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

கடந்த மாதம் 5ம் தேதி இப்படம் வெளியான போது ஹிந்தியில் வெளியிடவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து இன்று செப்டம்பர் 2ம் தேதி வட மாநிலங்களில் வெளியிடுகிறார்கள். இங்கு கிடைத்த வரவேற்பு போலவே இப்படத்திற்கு ஹிந்தியிலும் கிடைக்குமா என படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அதற்கான விடை கிடைத்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !