உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்??

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்??

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த 'பைசன்' படப்பிடிப்பின் போது துருவ், அனுபமா இருவரும் காதலிப்பதாக ஒரு தகவல் பரவியது. மேலும் இருவரது தனிப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், அதன்பின் அந்தக் காதல் கிசுகிசு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போனது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஒரு தனியார் விருது விழாவில் 'பைசன்' படத்திற்கு விருது வழங்கப்பட்டது. இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் துருவ்வுடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் அனுபமா. அப்புகைப்படத்தின் பின்னணியில் 'பைசன்' படத்தின் 'தீக்கொளுத்தி' பாடலின் பின்னணி இசையையும் ஒலிக்க விட்டுள்ளார். காதல் வலியைச் சொல்லும் உணர்ச்சிகரமான பாடல் இது.

இந்த செல்பி மூலம், சமூகத்திற்கு எதையோ சொல்ல வருகிறார் அனுபமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !