உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம்

மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம்

எம்.எஸ்.மூர்த்தி இயக்கத்தில் ‛சரவணன் மீனாட்சி' புகழ் ரச்சிதா மகாலட்சுமி நடித்த ஹாரர் படம் 99/66. இதில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா முக்கியமான வேடத்தில் வருகிறார். சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோரும் நடித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு என்று பெயர் வைத்துள்ளோம். அந்தக் குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பு வாசிகளை அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்துகின்றன. அவை ஏன் நடைபெறுகின்றன? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை ஹாரர் கலந்து சொல்லி இருக்கிறோம்

இதுவரை சினிமாவில் காட்டப்படாத வகையில் இதில் ஐநூறு புத்த பிக்குகள் நடித்துள்ளனர். இதற்காக அரசு அனுமதியை பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கினோம். இந்த படத்தின் மூன்று விதமான ஆன்மிகம் சார்ந்த பாடல்கள் இடம்பெற இருக்கிறது. அதில் அருவா மீசை காரன் என்ற கருப்பசாமி பாடலும், யாரு பிள்ளையாரு என்ற விநாயகர் பாடலும் வெளியாகி உள்ளது. மார்ச் 6ல் ரிலீஸ் என்கிறார் இயக்குனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !