வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்?
ADDED : 1176 days ago
வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் விஜய் நடித்து வரும் ‛வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாக இருப்பதால் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் செயலி வடிவமைப்பாளராக விஜய் நடித்து வருகிறார். இந்த வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட்டாக பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி தினத்தன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடல் வாரிசு படத்தில் விஜய்யின் என்ட்ரி பாடல் என்றும் கூறப்படுகிறது.