பாலாஜி மோகன் படத்தில் காளிதாஸ் ஜெயராம் - துஷாரா விஜயன்
ADDED : 1130 days ago
தமிழில் துல்கர் சல்மான் நடித்த வாயை மூடி பேசவும், தனுஷ் நடித்த மாரி, மாரி- 2 போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். மாரி- 2 வுக்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டு சில முன்னணி ஹீரோக்களிடத்தில் கால்சீட் கேட்டு வந்தார் பாலாஜி மோகன். இந்த நிலையில் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்துள்ள காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகிய இருவரையும் இணைத்து தனது புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் . காதல் கதையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.