மேலும் செய்திகள்
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
1098 days ago
அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா
1098 days ago
கொம்பு வச்ச சிங்கம்டா படத்திற்கு பிறகு சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காரி, அயோத்தி படங்களில் நடித்து வருகிறார். இதில் அயோத்தி படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார். மந்திர மூர்த்தி இயக்குகிறார். யஷ்பால் சர்மா 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். என். ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கி, மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி வரையிலான கதை களத்தை கொண்ட ஆன்மிகம் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
1098 days ago
1098 days ago