நயன்தாரா படத்தில் 5 ஹீரோயின்கள்
ADDED : 1130 days ago
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் படம் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம். 'தானா சேந்த கூட்டம்' படத்தில், விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் இந்தப் படத்தை இயக்குகிறார். சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார், அருண் சாண்டி இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் 5 முக்கிய நடிகைகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகி ஜோனிதா காந்தி இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். அவருடன் ரியா சுமன், வைஷ்னவி, ரேச்சல், மால்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.