உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித்

இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித்


நடிகை ஷாலினி தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாலினி என்கிற பெயரில் நடித்து பிரபலமானவர். பின்னர் மலையாளம், தமிழ் மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்தார். தமிழில் 'காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்' ஆகிய 5 படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதில் அஜித்துடன் 'அமர்க்களம்' படத்தில் இணைந்து நடித்த போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் ஷாலினி.

அந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “என்னுடைய குழந்தைகள் இருவருமே இதுநாள் வரை நான் நடித்த படங்களை பார்க்கவில்லை. பார்ப்பதற்கு ஆர்வமும் காட்டவில்லை. கேட்டால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்கிறோம் என்று பதில் சொல்வார்கள். சமீபத்தில் என் மகளின் தோழி என்னுடைய அலைபாயுதே படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னதை தொடர்ந்து என்னுடன் சேர்ந்து அந்த படத்தை பார்க்க போவதாக சொன்னார். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை.” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !