ஹீரோயின் இல்லாத படத்தில் 3 தோற்றத்தில் நடிக்கும் சிபிராஜ்
ADDED : 1178 days ago
சிபிராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் இளையராஜா கலிய பெருமாள் இயக்குகிறார். லதா பாபு, துர்க்கைனி தயாரிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படம், ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகிறது.
இப்படத்தில் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடி இல்லை. அதாவது படத்தில் ஹீரோயின் இல்லை. ஆனால் 25 முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையில் உருவாகிறது.
இப்படத்தில் வத்திக்குச்சி புகழ் திலீப், கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா, பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.