தொடரும் யோகி பாபுவின் நாயகன் பயணம்
ADDED : 1122 days ago
தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. காமெடியனாக நடித்தாலும் இடையிடையே சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். அந்த வரிசையில் தற்போது அவர் கதை நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடித்த ராஜவம்சம் படத்தை இயக்கிய கே.வி.கதிர்வேலு இந்த படத்தை இயக்குகிறார். ராக்புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் சென்ட்ராயன், சவுந்தர்ராஜா, நிரோஷா, சாம்ஸ் உளளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.