பாலிவுட் அறிமுகமே அமர்க்களம் : இரண்டு வேடங்களில் சமந்தா
ADDED : 1119 days ago
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா, ஏற்கெனவே தி பேமிலி மேன் தொடரின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகிவிட்டார். தற்போது பேமிலி மேன் இயக்குனர்கள் டீகேவின் இயக்கத்தின் மற்றுமொரு வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தா நடித்து வரும் சாகுந்தலம், யசோதா படங்கள் பன்மொழி படம் என்கிற வகையில் அவையும் ஹிந்தியில் வெளியாகிறது.
இந்நியைில் சமந்தா நேரடியாக நடிக்கும் ஹிந்திப் படத்தை அமர் கவுசிக் இயக்குகிறார். இதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பேண்டசி, திரில்லராக உருவாகும் இந்த படத்தில் சமந்தா ஒரு நாட்டின் இளவரசியாகவும், பேயாகவும் நடிக்கிறார். இதில் அவர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கிறர். பாலிவுட்டின் முதல் படத்திலேயே இரண்டு வேடகங்களில் அமர்க்களமாக களம் இறங்குகிறார் சமந்தா.