போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரோஷினி பிரகாஷ்
ADDED : 1163 days ago
மிஸ்.பெமினா டைட்டில் வென்றதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர் ரோஷினி பிரகாஷ். சகாப்தி எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த அவர் தமிழில் ஏமாளி படத்தின் மூலம் அறிமுகமானார். கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜடா படத்தில் நடித்தார்.
தற்போது விதார்த்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவர் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் படம் இது. எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். எஸ்.ஆர்.சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். துப்பறியும் த்ரில்லர் படமாக உருவாகிறது.