படப்பிடிப்பு தளத்தில் ரஜினி - ஷாருக்கான் திடீர் சந்திப்பு!
ADDED : 1167 days ago
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதேப்போல், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பும் அதே ஸ்டுடியோவில் தான் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். அவரைக்கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த ஷாருக்கான் கட்டித்தழுவி வரவேற்றுள்ளார். அதையடுத்து அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.