உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொடர் தோல்விகளால் தவிக்கும் 'வணங்கான்' நாயகி கிரித்தி ஷெட்டி

தொடர் தோல்விகளால் தவிக்கும் 'வணங்கான்' நாயகி கிரித்தி ஷெட்டி

தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகப் படத்திலேயே பலரையும் கவர்ந்த கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படங்களான “ஷியாம் சிங்க ராய், பங்கார்ராஜு” ஆகிய படங்கள் வெற்றிப் படங்களான அமைந்தன.

அதே சமயம், லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாரான 'த வாரியர்' படம் மூலம் தனது முதல் தோல்வியை சந்தித்தார் கிரித்தி. அந்த முதல் தோல்வி அவருக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களிலும் வந்துவிட்டது. “மச்சேர்ல நியோஜகவர்க்கம், ஆ அம்மாயி குரின்ச்சி மீக்கு செப்பாலி' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின.

இருப்பினும் தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள நாக சைதன்யா நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி, ஹாட்ரிக் தோல்வி என வந்தாலும் முன்னணி நடிகர்களின் ஜோடியாக மட்டுமே வரும் வாய்ப்புகளை ஏற்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் கிர்த்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !