மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1083 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1083 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1083 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தற்போது தெலுங்கில் 'யசோதா, சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 'குஷி' என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
இதனிடையே, 'குஷி' படத்தில் நடிக்க வேண்டிய சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு அவரைப் பற்றிய சில தகவல்கள் டோலிவுட்டில் வெளியாகின. சில வருடங்களுக்கு முன்பு தோல் சம்பந்தப்பட்ட வியாதியால் சில காலம் ஓய்வெடுத்திருந்தார். சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதனால், அவர் மீண்டும் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவும் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
'குஷி' படத்தின் படப்பிடிப்பில் தற்போதைக்கு கலந்து கொள்ள முடியாது என்றும் தகவல் சொல்லிவிட்டாராம். ஓரிரு மாதங்கள் ஓய்விற்குப் பிறகே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன. முன்பைப் போல சமூக வலைத்தளங்களிலும் சமந்தா ஆக்டிவ்வாக இல்லை. அவராக இது பற்றி விளக்கமளிக்கும் வரை பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.
1083 days ago
1083 days ago
1083 days ago