மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1079 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1079 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
1079 days ago
தமிழ் சினிமாவில் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு வரலாற்றுப்படமாக வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். அமரர் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு வருடங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம் வரும் செப்.,30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் பற்றி நடிகர் பிரசன்னா கூறும்போது, “தான் சினிமாவில் நடிகனாக நுழைந்த காலத்தில் இருந்தே இப்படி குதிரையில் சவாரி செய்யும் ஒரு வீரனாக நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமின் தோற்றத்தை பார்த்ததும் அதில் நான் என்னையே பார்த்துக்கொண்டேன். ஏதோ ஒரு நாளில் என் விருப்பம் நிறைவேறும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் பிரசன்னா. இதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம், “எனக்கு தெரியும்.. நிச்சயமாக விரைவில் ஒரு நாள் உன் கனவு நிறைவேற இருக்கின்றது” என்று ஊக்கம் அளித்துள்ளார்.
1079 days ago
1079 days ago
1079 days ago