மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1076 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1076 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1076 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் ரெண்டு ராஜா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில், தனுஷின் இரண்டு கதாபாத்திரம் குறித்து விரிவாக பேசுவது போல் புரியும். இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். தனுஷோடு இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவும் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் வரும் அரக்கன் ஒருவன் இல்லையென்றால்...இறைவன் மகிமை புரியாது வரும் வரிகள் பலரது கவனத்தை ஈர்த்து இருக்குது. இப்படம் வருகிற 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
1076 days ago
1076 days ago
1076 days ago