நடிகர் போண்டாமணிக்கு, ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் தனுஷ்
ADDED : 1146 days ago
பிரபல காமெடி நடிகரான போண்டாமணி, இரண்டு கிட்னி செயல்இழந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போண்டாமணி அவருக்கு உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் தற்போது அவருக்கு உதவி செய்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும் தனது சார்பில் ரூ.1 லட்சம் வழங்கினார் .
இந்நிலையில் போண்டாமணிக்கு, ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் தனுஷ். இதற்காக போண்டாமணி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.