உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயராமை ஆன்மிக குருவாக ஏற்ற ஜெயம்ரவி

ஜெயராமை ஆன்மிக குருவாக ஏற்ற ஜெயம்ரவி

ஜெயம்ரவி தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் ஆலோசகர்களில் ஒருவராக ஆழ்வார்க்கடியான் கேரக்டரில் நடித்துள்ளார் மலையாள நடிகர் ஜெயராம்.

தற்போது பொன்னியின் செல்வனின் புரமோசன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் இருவரும் கிடைத்த கேப்பில் சபரிமலை சென்ற வழிபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஜெயம்ரவி பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராம் என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !