திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி!
ADDED : 1100 days ago
தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு மீண்டும் சினிமாவில் படங்கள் இயக்க போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு அவ்வப்போது தான் சைக்கிளிங், ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருபவர், சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .