மேலும் செய்திகள்
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!
1088 days ago
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
1088 days ago
ஆந்திராவை சேர்ந்த இளம் டாக்டர் ரூபா கொடுவயூர். சாய்பல்லவி மாதிரி இவரும் ஆபரேஷன் தியேட்டரை விட்டுவிட்டு சினிமா தியேட்டடருக்கு வந்து விட்டார். முறைப்படி நடனம் கற்ற இவர் நாட்டிய மயூரி உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றிருக்கிறார். தெலுங்கில் 'உமா மகேஸ்வரா உக்ர ருபாசியா' படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் எமகாதகி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தை நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் இணைந்து தயாரிக்கிறார்கள். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள்..
இதுகுறித்து வெங்கட் ராகுல் கூறியதாவது: புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. என்றார்.
1088 days ago
1088 days ago