ஆசியாவின் சிறந்த நடிகராக குரு சோமசுந்தரம் தேர்வு
ADDED : 1091 days ago
ஆசிய கண்டத்தில் வெளியாகும் திரைப்படங்களை மையமாக கொண்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஏசியன் அகாடமிக் கிரியேடட்டிவ் விருது விழாவில் வழங்கப்படும் 2022ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்காக 16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப்படங்கள் கலந்துகொண்டன. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட மலையாள திரைப்படமான மின்னல் முரளி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.