20 நாளில் ஓடிடியில் வெளியாகும் டிரிக்கர்
ADDED : 1111 days ago
அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் நடித்திருந்த படம் டிரிக்கர். டொனியன் சோஸ்லே இயக்கி இருந்தார், ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பபட்டுள்ள இப்படம் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வருகிற 14-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 20 நாளில் ஓடிடி தளத்தில் வெளியாவது தியேட்டர் அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.