வெங்கட் பிரபு படத்தில் இணைந்த பிரியாமணி
ADDED : 1339 days ago
மாநாடு, மன்மதலீலை படங்களை தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில நடிகர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இப்போது ஜீவா கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை தொடர்ந்து பிரியாமணியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மேலும் நடிகர் சம்பத்தும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.