உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமைதிக்கு முன்பு ஒரு புயல் : அஜித் போட்டோ வைரல்

அமைதிக்கு முன்பு ஒரு புயல் : அஜித் போட்டோ வைரல்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தாய்லாந்து நாட்டில் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார் அஜித்குமார். அப்போது அவர் அங்குள்ள ஒரு புத்தர் சிலைக்கு முன்பு தான் நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், அமைதிக்கு முன்பு ஒரு புயல் என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !