தமிழுக்கு வரும் சப்தமி கவுடா
சதீஷ் நினசம், சப்தமி கவுடா நடிப்பில் பிப்ரவரில் வர உள்ள படம் தி ரைஸ் ஆப் அசோகா. கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழில் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாகிறது. படம் குறித்து ஹீரோ சதீஷ் கூறியது, ‛‛தமிழகம், கர்நாடக பார்டரில் இருக்கும் சாம்ராஜ் நகரில் 1970களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஜாதி பிரச்னையையும் படம் பேசுகிறது. நினசம் என்ற நாடக பட்டறையில் இருந்து நான் வந்தேன். நான் நடித்த லூசியா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் பார்த்து விட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்னை போனில் அளித்து பாராட்டினார். அந்த படம் தமிழில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் ரீமேக் ஆவது. சித்தார்த் நடித்தார். சில ஆண்டுகால உழைப்பில் இந்த படம் உருவானது. இந்த கதை, கலாச்சாரம், பாடல்களுக்கும் தமிழுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அதனால் தமிழில் ரிலீஸ் செய்கிறோம். காந்தாரா ஹீரோயின் சப்தமி கவுடா சிறப்பாக நடத்து இருக்கிறார். படத்தில் ஆன்மிகமும் இருக்கிறது. நானே ஒரு சிவன் பாடல் பாடி இருக்கிறேன்'' என்றார்.