டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா
ரஜினியின் படையப்பா, விஜயின் கில்லி , சச்சின் என பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் வசூலித்து வருகின்றன. இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கடந்த 2011ம் ஆண்டு திரைக்கு வந்த மங்காத்தா படமும் வருகிற ஜனவரி 23ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அஜித் குமாருடன் அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது 1.5 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடைசியாக அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த நிலையில் அவரது அடுத்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதால் இந்த மங்காத்தா படம் ஓடும் முக்கிய தியேட்டர் வளாகங்களில் கட்அவுட், பேனர்களை வைத்து வரவேற்பு கொடுக்க அஜித் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.