பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால்
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ஜோதி கிருஷ்ணா இயக்கி வெளியான படம் ஹரி ஹர வீரமல்லு. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்தது. இதில் பவனுக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்திருந்தார். இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் பவன் கல்யாண் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பவன் கல்யாண் ஒரு அதிசயம் . ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் அவரை கடவுளை போல் பார்க்கிறார்கள். அவர் மிகவும் புத்திசாலி மனிதர். அவரிடம் ஏதோ ஒரு காந்தம் இருக்கிறது. மக்கள் சாதாரணமாக பேசாத விஷயங்களை சொல்லும் தைரியம் அவருக்கு உள்ளது.
பவன் கல்யாண் பாக்ஸ் ஆபிஸுக்கு அப்பாற்பட்ட நடிகர். அதனால் வெற்றி தோல்விகள் அவரை பாதிக்காது. அவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமர் ஆனாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் தகுதியும் அவருக்கு உள்ளது. மேலும், அவர் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இப்போது துணை முதலமைச்சர் ஆகி உள்ளார். ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் திரைப்படங்களிலும் பயணிப்பது. மக்களிடம் அவர்கள் பிரச்சனைகளை பேசுவதை பார்த்துக்கிறேன். அவர் எதையுமே விளம்பரத்திற்காக செய்வதில்லை. உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார். இது அவரது பொது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.