அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ்
அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 2 படம், 2024ம் ஆண்டு வெளியாக வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு அவர் நடித்த ராம்போ படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு அவர் நடித்த 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக, டிமான்டி காலனி 3 பெரியளவில் உருவாகி உள்ளது. இதிலும் பிரியா பவானி சங்கர் இருக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இது பக்கா ஹாரர் படம் என்பது அனைவரும் அறிந்ததே. முந்தைய பாகங்களை விட கூடுதல் மிரட்டலுடன் இந்த படம் உருவாகி உள்ளதாம்.
அடுத்து, மை டியர் சிஸ்டர் என்ற படத்தில் அருள் நிதி நடித்துள்ளார். இதில் அவர் சிஸ்டராக மம்தா மோகன் தாஸ் நடித்துள்ளார். இது அக்கா, தம்பி பாசம் கலந்த கதையாக உருவாகி உள்ளது. என்னசார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். அடுத்து கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்வான் என்ற படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. தேன், தகராறு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயக். இந்த 3 படங்களும் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு.