அஜித்தை காண குவிந்த ரசிகர்கள் கூட்டம்
ADDED : 1080 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் பேட்ஜ் ஒர்க் பணிகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருவதால் சென்னை அண்ணா சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் நேற்று நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அங்கே படையெடுத்தார்கள். அஜித் இருந்த கேரவனை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். இதையடுத்து கதவை திறந்து உள்ளே நின்றபடியே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து சென்றார் அஜித்குமார். அப்படி அவர் கேரவனுக்குள் நின்றபடி ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .