உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் பிறந்தநாளில் ‛விக்ரம்' 100வது நாள் விழா கொண்டாட்டம்

கமல் பிறந்தநாளில் ‛விக்ரம்' 100வது நாள் விழா கொண்டாட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், காயத்ரி உள்பட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசை அமைத்திருந்தார். ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான இந்த படம் தற்போதும் ஒரு சில தியேட்டர்களில் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் 100வது நாள் விழாவை வருகிற நவம்பர் 7ம் தேதி, கமல் பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்த இருக்கிறார்கள். இது தொடர்பாக ராஜ்மல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த விழாவில் திரைப்படம் தொடர்புடைய அனைவரும் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். இணை தயாரிப்பாளரான மகேந்திரன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !